NPSC GK Study material -TNPSC Group 2 St

21 Aug

NPSC GK Study material -TNPSC Group 2 Study material – TNPSC model question paper

இந்தியாவின் பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) பற்றி அறிந்து கொள்ளுங்கள்…..

பட்ஜெட் என்பது பிரெஞ்சு மொழியிலிருந்து வந்த சொல். இதற்கு தோல் பை என்று அர்த்தம். பர்ஸ் என்றும் கூறுவதுண்டு. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதியை குடியரசுத் தலைவர் முடிவு செய்வார். பட்ஜெட் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். முதல் பகுதி நாட்டின் பொருளாதார நிலையை விளக்கும். இரண்டாவது பகுதி எந்தெந்த பொருள்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. எவற்றுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்பதை விவரிக்கும். பொதுவாக பட்ஜெட் பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் தாக்கல் செய்யப்படும்.

முதன்முதலாய்…….

இந்தியாவில் முதன் முதலின் 1860 ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை பிரிட்டன் அறிமுகம் செய்தது. முதலாவது பட்ஜெட்டை நிதிக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார். மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை 1924-ம் ஆண்டு சர் பாசில் பிளாக்கெட் என்பவரால் அறிமுக செய்யப்பட்டது.

நாடு சுதந்திரமடைந்தபிறகு 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நிதி அமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டி முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் காலம் ஏழரை மாதங்களாகும்.
read more http://www.tnpsctamil.in/2014/08/union-budget-of-India-tnpsc-upsc-study-materials.html

Leave a comment